ரூ.15 லட்சம் வரை மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம்


ரூ.15 லட்சம் வரை மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.15 லட்சம் வரை மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்


திருவாரூர் மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.15 லட்சம் வரை மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி

திருவாரூர் மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.15 லட்சம் வரை மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை கொள்கை 2008-ன் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்குடன் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் 55 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு

விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஆட்டிசம் குறைபாடுள்ளவர்கள் மற்றும் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் வயது உச்சவரம்பு 45 வயதிலிருந்து 55 வயதாக உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச கல்வி தகுதியில் இருந்தும் விலக்களிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கிகள் மூலமாக வழங்கப்படும் கடன் உதவிக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியம் ரூ.3.75 லட்சம் மானியமாக பெற்று பயன் பெறலாம்.

கடன் பெற இயலாது

நேரடி விவசாயம் மற்றும் அதைச்சார்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story