அன்னதானம் வழங்க அனுமதி பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
கார்த்திகை தீபத் திருவிழாவின் போது அன்னதானம் வழங்க அனுமதி பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் போது அன்னதானம் வழங்க அனுமதி பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 27-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) கொடியேற்றமும், டிசம்பர் மாதம் 6-ந் தேதி மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இவ்விழாவை காண வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 30 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவின் போது அன்னதானம் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் 27 பொது இடங்கள் மற்றும் 157 தனியாருக்கு சொந்தமான இடங்கள், மண்டபங்கள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்ட 27 பொது இடங்களின் மட்டும் அன்னதானம் வழங்க வேண்டும்.
அனுமதி அளிக்கப்பட்ட பொது மற்றும் தனியார் இடங்களில் அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மற்றும் திருவண்ணாமலை செங்கம் சாலை பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் நாளை (செவ்வாய்கிழமை) முதல் வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) வரை அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பிப்பதற்கு 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், முகவரி தெரிவிக்கும் ஏதேனும் அங்கிகரிக்கப்பட்ட சான்று நகல், தங்கள் சார்ந்தவர்களின் விவரத்தினை ஆதார் அட்டை நகலுடன் அளிக்க வேண்டும்.
சட்டரீதியான நடவடிக்கை
26-ந் தேதிக்கு பின்னர் அன்னதான விண்ணப்பம் பெறப்பட மாட்டாது. அன்னதானம் அளிப்பவர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம் அளிக்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது.
கிரிவலப்பாதையில் பக்கதர்களுக்கு இடையுறு இல்லாமல் கிரிவலப்பாதையிலிருந்து 100 மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய்தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்ககூடாது
. வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்கவேண்டும். உணவு பொருட்கள் தரமானதாகவும், துய்மைதானதாகவும் மற்றும் கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளில் அன்னதானம் வழங்ககூடாது. பிளாஸ்டிக் டம்ளர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய கூடாது.
உணவு கழிவு பொருட்களை போடுவதற்கு ஏதுவாக குப்பை தொட்டிகளை ஏற்பாடு செய்து அன்னதானம் அளிப்பவர்களே உணவு கழிவுகளை சேகரித்து அகற்ற வேண்டும்.
அன்னதானம் வழங்குமிடத்தை சுத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும். போதிய வழிக்காட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் தொடர்புக்கு 044-237416, 9047749266, 9865689838. என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.