50 சதவீத மானியத்தில் ஜவுளி பூங்கா அமைக்க விண்ணப்பிக்கலாம்


50 சதவீத மானியத்தில் ஜவுளி பூங்கா அமைக்க விண்ணப்பிக்கலாம்
x

50 சதவீத மானியத்தில் ஜவுளி பூங்கா அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை தமிழக அரசால் வழங்கப்படும்.

இவ்வாறு அமைய உள்ள ஜவுளி பூங்கா குறைந்த பட்சம் 3 தொழிற் கூடங்களுடன் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு மண்டல துணை இயக்குனர், துணி நூல் துறை, சேலம்‌ அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story