ஆசிரியர் பயிற்சி தனி தேர்வுக்கு13-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்


ஆசிரியர் பயிற்சி தனி தேர்வுக்கு13-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் பயிற்சி தனி தேர்வுக்கு 13-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்

கடலூர்

வடலூர்

வடலூரில் இயங்கி வரும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆசிரியர் பயிற்சி தனி தேர்வர்களுக்கு அடுத்த மாதம் (ஜூன்) தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் தேர்வு நடக்கும் வடலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால் தனி தேர்வாளர்கள் இந்த நிறுவனத்தில் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து உரிய தேர்வு கட்டணத்தை செலுத்தலாம். தபால் வழி பெறப்பட விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தனித்தேர்வாளர்கள் விண்ணப்பிக்க வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்தும், போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதில் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் வருகிற 15, 16-ந்தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சிறப்பு அனுமதி கட்டணமாக கூடுதலாக ரூ.1000 செலுத்த வேண்டும்.

இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story