விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க நாளை மறுநாளுக்குள் (திங்கட்கிழமை) www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பொது பிரிவினர் 15 முதல் 35 வயது வரையிலும், பள்ளி மாணவ-மாணவிகள் 12 முதல் 19 வயது வரையிலும், கல்லூரி மாணவ-மாணவிகள் 17 முதல் 25 வயது வரையிலும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் வயது வரம்பு இல்லை. மேலும் விவரங்களுக்கு 04328-299266 என்ற தொலைபேசி எண்ணையோ, 7401703516, 9514000777 என்ற செல்போன் எண்களையோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட விளையாட்டு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story