ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்


ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தெரிவித்துள்ளார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-மயிலாடுதுறை மாவட்டத்தில் போலீஸ் துணையாக பணிபுரிந்து வரும் ஊர்க்காவல் படையில் தற்போது காலியாக உள்ள 41 பணியிடங்களுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண்கள் சேர்வதற்கான ஆட்சேர்ப்பு முகாம் மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற உள்ளது. மேற்படி தேர்விற்கு தகுதி உடைய விண்ணப்பதார்கள் வரும் 30-ந் தேதிக்குள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும். 18 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட நல்ல உடற்தகுதி, சேவை மனப்பாண்மை உடையவர்கள், 10-ம் வகுப்புவரை படித்தவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணபிக்க வேண்டும். நேர்முக தேர்விற்கு வரும்போது கல்விசான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார்காடு, 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டு ஆகியவற்றுடன் வரவேண்டும். மயிலாடுதுறை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு தகுதி உடைய பட்டதாரி இளைஞர்கள், தொண்டு உள்ளம் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சான்றிதழ் பெற்றவர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story