ரேஷன்அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்கலாம்
ரேஷன்அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்கலாம் என துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்
மயிலாடுதுறை உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினர் பயன் பெறும் வகையில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது. இவற்றை சிலர் முறை கேடாக கடத்தி, கள்ளச்சந்தையில் அதிக லாபத்திற்கு விற்கின்றனர். இவ்வாறு ரேஷன் அரிசியை பதுக்கி அதிக லாபத்திற்கு விற்பவர்கள் பற்றி பொதுமக்களுக்கு தெரியும் பட்சத்தில், 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அவர்களின் ரகசியம் காக்கப்படும். இதற்காக மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இது கூடுதல் டி.ஜி.பி. யின் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.