நீடாமங்கலத்தில் நின்று செல்ல வேண்டும்


நீடாமங்கலத்தில் நின்று செல்ல வேண்டும்
x

நீடாமங்கலத்தில் நின்று செல்ல வேண்டும்

திருவாரூர்

ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினர்.

ஜோத்பூர் எக்ஸ்பிரஸ்

மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக வாரம்தோறும் ஜோத்பூருக்கு எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில் வாரம்தோறும் திங்கட்கிழமையன்று மன்னார்குடியிலிருந்து புறப்பட்டு நீடாமங்கலம், திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூர் ெரயில் நிலையத்தை சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஆந்திர மாநிலம் வழியாக ஜோத்பூரை சென்றடைகிறது.

மீண்டும் ஜோத்பூரிலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை மன்னார்குடிக்கு வந்தடைகிறது. இந்த வாராந்திர ெரயில் மூலம் தமிழகம், ராஜஸ்தான் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம் பயனடைகின்றனர்.

என்ஜின் பராமரிப்பு பணி

இந்த ெரயில் நீடாமங்கலத்தில் நிற்பதில்லை. நீடாமங்கலத்தில் இந்த ெரயில் நின்று சென்றால் நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் சென்னை வரை செல்ல பயனுள்ளதாக அமையும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் ரெயில்வே நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

ஜோத்பூரிலிருந்து சனிக்கிழமை மன்னார்குடி செல்லும் இந்த ெரயில் மீண்டும் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு வந்து என்ஜின் திசைமாற்றி திருச்சிக்கு பராமரிப்பு பணிக்காக செல்கிறது.

நின்று செல்ல வேண்டும்

அதேபோல் பராமரிப்பு பணி முடித்து திங்கட்கிழமை திருச்சியிலிருந்து நீடாமங்கலம் வந்து என்ஜின் திசை மாற்றி மன்னார்குடி செல்கிறது. இந்த 2 நாட்களில் என்ஜின் திசைமாற்ற 2 மணிநேரம் ஆகிறது. இந்த நேரங்களில் ரெயில்வேகேட் மூடப்படுகிறது. இதனால் நீடாமங்கலத்தில் நெடுஞ்சாலை போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே நீடாமங்கலம் பகுதி மக்களும் பயனடைய ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ெரயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அப்பகுதி பயணிகளின் கோரிக்கையாகும்.


Next Story