குட்டையில் இளம் பெண் பிணம்


குட்டையில் இளம் பெண் பிணம்
x

தேன்கனிக்கோட்டை அருகே குட்டையில் இளம் பெண் இறந்து கிடந்தார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை தாலுகா மாருப்பள்ளி அருகே உள்ள டி.மல்லசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் சுப்ரியா (வயது 19). தனியார் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள குட்டையில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story