சிதம்பரம் அருகே 'ஹேர் ஆயில்' குடித்து இளம்பெண் தற்கொலை
சிதம்பரம் அருகே ‘ஹேர் ஆயில்’ குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அருகே உள்ள டி.எஸ்.பேட்டை சின்ன வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி சுருதி (வயது 28). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். வெளிநாட்டில் வேலை செய்து வந்த அறிவழகன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுருதி நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அறிவழகன் டாக்டரிடம் அழைத்துச் சென்று வந்ததாக தெரிகிறது. பின்னர் சிறிது நேரத்தில் சுருதி வீட்டில் இருந்த தலைமுடிக்கு தடவும் 'ஹேர் ஆயிலை' எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுருதி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.