கணவர் வீட்டு முன்பு விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை


கணவர் வீட்டு முன்பு விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
x

திருமங்கலத்தில் கணவர் வீட்டு முன்பு விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரை

திருமங்கலம்

திருமங்கலத்தில் கணவர் வீட்டு முன்பு விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்து வேறுபாடு

திருமங்கலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் மகள் பாண்டீஸ்வரி (வயது 21), இவர் திருமங்கலம் என்.ஜி.ஓ.நகரை சேர்ந்த நவீன் பிரசாத் (21) என்பவரை காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த சில மாதங்களில் பாண்டீஸ்வரி-நவீன் பிரசாத் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாண்டீஸ்வரி அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி நவீன் பிரசாத் திருமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி புகார் கொடுத்தார். மகளிர் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். இருவரையும் கவுன்சிலிங் செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை

இந்த நிலையில் வாலிபர் நவீன் பிரசாத் கடந்த 20-ந்தேதி சென்னைக்கு வேலை பார்க்கச் சென்றுவிட்டார். கணவர் சென்னைக்கு சென்றது தெரியாமல் அவர் என்.ஜி.ஓ.நகருக்கு சென்று கடந்த சில தினங்களாக கணவர் குறித்து விசாரித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மதுரையில் வேலைக்குச் சென்று விட்டு திருமங்கலம் வந்த இளம்பெண் பாண்டீஸ்வரி கணவர் வீட்டு முன்பு விரக்தி அடைந்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாண்டீஸ்வரி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். திருமணமாகி 2 ஆண்டுக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story