வாடிப்பட்டி அருகே திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இளம்பெண் தற்கொலை
வாடிப்பட்டி அருகே திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாப்பிள்ளை பார்த்து வந்தார்
வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களது மகள் கீதா (வயது 25). 9-வது வரை படித்துவிட்டு வீட்டில் தையல் எந்திரம் வைத்து ஆடைகள் தைத்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முருகன் இறந்து விடவே பூச்சம்பட்டியில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு லட்சுமி வாடிப்பட்டி பெருமாள் கோவில் தெருவில் வாடகை வீட்டிற்கு குடிவந்தார். லட்சுமி அந்த பகுதியில் உள்ள செங்கல் காளவாசலில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கீதாவிற்கு 25 வயது ஆனதால் திருமணம் செய்வதற்கு பல இடங்களில் லட்சுமி மாப்பிள்ளை தேடி வந்தார். ஆனால் கீதாவிற்கு திருமணத்தில் விருப்பமில்லாததால்அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்நிலையில் நேற்று மதியம் பூச்சம்பட்டியில் உள்ள அவரது பூர்வீக வீட்டிற்கு சென்று கீதா தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு சுந்தரபாண்டியன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.