பிரசவத்தில் இளம்பெண் சாவு


பிரசவத்தில் இளம்பெண் சாவு
x

ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

சேலம்

ஓமலூர்

ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

இளம்பெண்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி ஓலைப்பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளி பிரகாஷ். இவருக்கும், முத்துநாயக்கன்பட்டி கரிசல்பட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த இந்துமதி (வயது30) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் ஷர்மிகாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையே இந்துமதி 2-வதாக கர்ப்பம் ஆனார்.

நிறைமாத கர்ப்பிணியான இந்துமதியை, ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தனர். அங்கு நேற்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை மட்டும் குடும்பத்தினரிடம் டாக்டர்கள் காட்டியதாகவும், இந்துமதி மயக்கத்தில் இருப்பதாக கூறி அவரை பார்க்க உறவினர்களை டாக்டர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. டாக்டர்களிடம், இந்துமதியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பரிதாப சாவு

இதற்கிடையே இந்துமதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இந்துமதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்துமதி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆவதால் இந்துமதி சாவு குறித்து மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலம் விசாரணை நடத்தி வருகிறார். பிரசவத்தின் போது இளம்பெண் இறந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story