ராஜபாளையம் அருகே தூக்கில் இளம்பெண் பிணம்
வரதட்சணையாக ேமாட்டார் சைக்கிள் கேட்டு கணவர் துன்புறுத்திய நிலையில், தூக்கில் இளம்பெண் பிணமாக தொங்கினார். அவரது சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
ராஜபாளையம்,
வரதட்சணையாக ேமாட்டார் சைக்கிள் கேட்டு கணவர் துன்புறுத்திய நிலையில், தூக்கில் இளம்பெண் பிணமாக தொங்கினார். அவரது சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மோட்டார் சைக்கிள் கேட்டு துன்புறுத்தல்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு தேவதானம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவநேசன் (வயது 26). இவருக்கும் வத்திராயிருப்பு சத்திரம் தெருவை சேர்ந்த லட்சுமி (24) என்பவருக்கும் கடந்த 1½ வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது பெண் வீட்டில் இருந்து நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சிவநேசன் தனக்கு கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் வாங்கித்தர வேண்டும் எனக்கேட்டு மனைவியை துன்புறுத்திய தாக கூறப்படுகிறது.
தூக்கில் பிணம்
குடும்ப சூழ்நிலையால் லட்சுமியின் பெற்றோர் வாங்கித்தர முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் சிவநேசன் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து லட்சுமி தன் பெற்றோரிடம் செல்போனில் கூறியுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் லட்சுமி தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதையறிந்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக சேத்தூர் போலீசில் லட்சுமியின் தந்தை பொன்னையா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். லட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொைல செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.