இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் கார் மோதி பலி


இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் கார் மோதி பலி
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண், கார் மோதி பலியானார்.

சிவகங்கை

காளையார்கோவில்,

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வீரனேந்தல்பட்டி கிராமத்தை சேர்ந்த அலங்காரம் என்பவருடைய மகள் ஜெயப்பிரியா (வயது 24). இவர் இளையான்குடி வட்டார கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.

நேற்று காலையில் ஜெயப்பிரியா தனது இருசக்கர வாகனத்தில் காளையார்கோவில் நோக்கி சென்றார்.

குருங்களிப்பட்டி பஸ் நிலையம் அருகே சென்றபோது, அவ்வழியாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக ஜெயப்பிரியா சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் ஜெயப்பிரியாவை மீட்டு காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story