பாா்வதிபுரம் மேம்பாலத்தில் கொட்டும் மழையில் நடனமாடிய இளம்பெண்கள்
பாா்வதிபுரம் மேம்பாலத்தில் கொட்டும் மழையில் இளம்பெண்கள் நடனமாடினர்.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலை 7 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுகிறது. நேரம் செல்ல செல்ல அனல் காற்று வீச தொடங்குகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயக்கம் காட்டி வருகிறார்கள். ஆனால் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் வெயில் அடித்தாலும் திடீரென அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதே போல நாகர்கோவிலிலும் கடந்த சில தினங்களுக்கு முன் இரவு மழை பெய்தது. அப்போது பார்வதிபுரம் மேம்பாலத்தில் 2 இளம்பெண்கள் ஒன்றாக சேர்ந்து குத்தாட்டம் போட்டனர். மேம்பாலத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தின் அருகே 2 பெண்களும் டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து நடனமாடினர். அதை அவர்களின் தோழிகள் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ பின்னணி இசையுடன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
--
Related Tags :
Next Story