சேலையால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


சேலையால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

சேலையால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

செந்துறை:

செந்துறை அருகே உள்ள செம்மன்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜசேகர்(வயது 22). இவரது தாய் சாந்தி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் ராஜசேகர் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மகாராஜபுரத்தில் உள்ள தனது பாட்டி மங்கலம் வீட்டில் தங்கி, லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் செம்மன் பள்ளத்தில் உள்ள தனது சித்தப்பா கருணாநிதி மகன் அன்புராஜின் திருமணத்திற்காக நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் அவர் பிணமாக தொங்கினார். திருமணத்திற்கு சென்று திரும்பியவர்கள் இதனைக் கண்டு இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் அங்கு விரைந்து வந்து ராஜசேகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story