விபத்தில் வாலிபர் சாவு
களக்காடு அருகே நடந்த விபத்தில் வாலிபர் இறந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சவளைக்காரன்குளத்தை சேர்ந்தவர் அண்ணாத்துரை மகன் வசந்த்ராஜா (வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவில் தனது மோட்டார் சைக்கிளில் சவளைக்காரன்குளம் செங்கல்சூளை அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக தோப்பூரை சேர்ந்த முத்துக்குட்டி என்பவர் ஓட்டி வந்த சைக்கிளும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதின. இந்த விபத்தில் வசந்த்ராஜா, முத்துக்குட்டி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டனர். பின்னர் வசந்த்ராஜாவை சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். முத்துக்குட்டி நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.