விபத்தில் வாலிபர் சாவு
கீழ்பென்னாத்தூர் பைபாஸ் கூட்ரோடு அருகில் வாகனம் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கீழ்பென்னாத்தூர்
கள்ளக்குறிஞ்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா வரகூர் புதிய காலனியில் வசித்து வருபவர் வேலு. இவரது மகன் பிரபு (வயது 21). இவர், செஞ்சி தாலுகா நாகமூண்டியை சேர்ந்த இளம் பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. கீழ்பென்னாத்தூர் பைபாஸ் கூட்ரோடு அருகில் வந்தபோது அவலூர்பேட்டையில் இருந்து கீழ்பென்னாத்தூர் நோக்கி சென்ற வாகனம் மீது திடீரென மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பிரபுவுக்கு படுகாயமும், இளம் பெண்ணுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பிரபு இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.