இளம் செஞ்சிலுவை சங்கத்தின் துணை குழு கூட்டம்


இளம் செஞ்சிலுவை சங்கத்தின் துணை குழு கூட்டம்
x

இளம் செஞ்சிலுவை சங்கத்தின் துணை குழு கூட்டம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் வழிகாட்டுதலின்படி, இளம் செஞ்சிலுவை சங்கத்தின் (ஜூனியர் ரெட் கிராஸ்) இந்த கல்வியாண்டிற்கான செயல்பாடுகளை வரையறை செய்யும் பொருட்டு துணை குழு கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கலைச்செல்வி தலைமை தாங்கி பேசுகையில், மாணவர்கள் இந்த இளம் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் சுகாதாரம், நட்புறவு, மனிதநேயம், சேவை ஆகிய மனப்பான்மைகளை வளர்த்து கொள்ள கவுன்சிலர்கள் வழிகாட்டிட வேண்டும், என்றார். மாவட்ட கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை (தொடக்க கல்வி), சுப்பிரமணியன் (தனியார் பள்ளி), பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி, இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கிளை கவுரவ செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இளம் செஞ்சிலுவை சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கன்வீனர் ராதாகிருஷ்ணன் நிகழாண்டு செயல்பாடுகள் பற்றியும், அதனை செயல்படுத்தும் விதம் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். இக்கூட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டின் வரவு-செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கைகள் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் கன்வீனர்கள், இணை கன்வீனர்கள் சங்கத்தின் செயல்பாடுகளை எடுத்து கூறினர். இதில் மாவட்டத்தின் 22 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், தனியார் பள்ளிகளின் முதல்வர்களும் கலந்து கொண்டனர்.


Next Story