மேட்டூர் அணையின் நீர்த்தேக்கத்தில் மூழ்கி வாலிபர் பலி


மேட்டூர் அணையின் நீர்த்தேக்கத்தில் மூழ்கி வாலிபர் பலி
x

மேட்டூர் அணையின் நீர்த்தேக்கத்தில் மூழ்கி கர்நாடக மாநில வாலிபர் பலியானார்.

சேலம்

மேட்டூர்:

கர்நாடக மாநில வாலிபர்

கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுகா தோமையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவருடைய மகன் திலீப்குமார் (வயது 20). இவர் அங்குள்ள பனியன் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திலீப்குமார் மேட்டூர் அருகே மாசிலாபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.

இந்தநிலையில் நேற்று அவரும், உறவினர்களும் அருகில் உள்ள மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு குளிக்க சென்றனர். அவர்கள் அங்கு உற்சாகமாக குளித்து கொண்டிருந்த நிலையில், திலீப்குமார் அணையின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாத அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

பலி

அவரை உறவினர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சி வீணானது. இதுகுறித்து மேட்டூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நீர்த்தேக்கத்தில் திலீப்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது.

இதையடுத்து சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு, அவரது உடல் மீட்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அணையின் நீர்த்தேக்கத்தில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story