வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது


வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2022 9:53 PM IST (Updated: 5 Jun 2022 9:54 PM IST)
t-max-icont-min-icon

வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார் .

திருவாரூர்

முத்துப்பேட்டை:-

முத்துப்பேட்டை தெற்கு காடு கிராமத்தை சேர்ந்த ஒருவருடைய இறுதிச்சடங்கு நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சேதுராமன் மகன் சந்திரன் (வயது22), கருணாநிதி மகன் பாலமுருகன் (27) ஆகியோர் தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த பாலமுருகன் தான் வைத்திருந்த அரிவாளால் சந்திரனின் இடுப்பில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சந்திரன் முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் சந்திரன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.


Next Story