மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு


மோகனூர் அருகே  கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு
x

மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவருடைய மகன் துஷ்யந்தன் (வயது 19). இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் கால்தவறி விழுந்து விட்டார்.

சுமார் 110 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் குறைவான அளவு தண்ணீர் இருந்தது. அதில் தத்தளித்து கொண்டு இருந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் (பொறுப்பு) சரவணன் தலைமையில் அங்கு விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்த வாலிபரை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர். கிணற்றில் தவறி விழுந்த வாலிபரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story