இளைஞர்கள் செல்போனை தவிர்த்து விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும்


இளைஞர்கள் செல்போனை தவிர்த்து விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும்
x

இளைஞர்கள் செல்போனை தவிர்த்து விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும் என அமைச்சர் சாத்தூா் ராமச்சந்திரன் கூறினார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,


இளைஞர்கள் செல்போனை தவிர்த்து விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும் என அமைச்சர் சாத்தூா் ராமச்சந்திரன் கூறினார்.

கால் பந்தாட்ட போட்டி

அருப்புக்கோட்டை தி.மு.க. இளைஞரணி, கால்பந்தாட்ட குழு இணைந்து மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 70-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கும், அதனைத்தொடர்ந்து சிறந்த ஆட்ட வீரர்களுக்கும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகின்ற காலங்களில் இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும்.

வளர்ச்சிக்கு உறுதுணை

விளையாட்டு தான் இளைஞர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இளைஞர்கள் செல்போனில் ஆர்வம் செலுத்தினால் செல்போன் தான் நண்பராக இருக்கும். விளையாட்டில் ஆர்வம் செலுத்தினால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

இளைஞர்களின் நலனில் கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டுத்துறைக்கு உதயநிதி ஸ்டாலினை நியமித்துள்ளார். அமைச்சராக பொறுப்பேற்றது முதல் விளையாட்டு வீரர்களுக்கான அனைத்து உதவிகளையும் முன் நின்று அவர் செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Next Story