கள்ளக்குறிச்சி அருகே கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது


கள்ளக்குறிச்சி அருகே கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் கோபாலகிருஷ்ணன்(வயது 31). மினிபஸ் கண்டக்டரான இவர், சம்பவத்தன்று; கள்ளக்குறிச்சியில் இருந்து மலைக்கோட்டாலத்திற்கு செல்லும் மினி பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது மலைக்கோட்டாலத்தில் பஸ்சில் ஏறிய தச்சூர் கிராமத்தை சேர்ந்த காசி மகன் வீரமணி (26) என்பவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தார். அப்போது டிக்கெட் எடுக்குமாறு கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சியில் இருந்து மலைக்கோட்டாலம் சென்றுகொண்டிருந்த மினிபஸ்சில் கோபாலகிருஷ்ணன் பணியில் இருந்தார். இதுபற்றி அறிந்த வீரமணி, இவருடைய தந்தை காசி ஆகியோர் தச்சூர் பேருந்து நிறுத்தத்தில் பஸ்சை வழிமறித்து. கண்டக்டர் கோபாலகிருஷ்ணனை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் காசி உள்பட 2 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து வீரமணியை கைது செய்தனர்.


Next Story