போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது
x

திருவேங்கடம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

திருவேங்கடம்:

திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் 9-வது வார்டில் நேற்று முன்தினம் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு சப்பர ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் தினேஷ் (வயது 30) என்பவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி (60) தட்டிக் கேட்டுள்ளார். உடனே தினேஷ், அந்தோணிசாமியை சரமாரியாக தாக்கி உள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குருவிகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், தினேஷை அழைத்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ், ராஜேஷ் குமாரையும் அவதூறாக பேசி தாக்கியுள்ளார். இதையடுத்து போலீசார் தினேசை கைது செய்தனர்.


Next Story