தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
வடமதுரை அருகே, தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்
வடமதுரை அருகே உள்ள மாலப்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 41). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர், செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாலப்பட்டியை சேர்ந்த மூர்த்தி (31) என்பவர், தனக்கு மதுபானம் வாங்கி வரும்படி தர்மராஜிடம் கூறியுள்ளார். அதற்கு தர்மராஜ் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, தர்மராஜை அவதூறாக பேசி இரும்பு கம்பியால் தாக்கினார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் தர்மராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தார்.
Related Tags :
Next Story