தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது


தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
x

நெல்லை மேலப்பாளையத்தில் தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

ெநல்லை மேலப்பாளையம் பீடி காலனியை சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் சுஜி மாரிமுத்து (வயது 20). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று மதியம் பீடி காலனி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த அஸ்ரப் அலி (29) என்பவர் சுஜி மாரிமுத்துவிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுஜி மாரிமுத்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஸ்ரப் அலியை கைது செய்தனர்.


Next Story