மோட்டார் சைக்கிளை எரித்த வாலிபர் கைது


மோட்டார் சைக்கிளை எரித்த வாலிபர் கைது
x

நெல்லை அருகே மோட்டார் சைக்கிளை எரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே சீவலப்பேரியை சேர்ந்தவர் மார்க்கண்டன். இவரது மகன் கல்யாணி (வயது 33). இவர் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். அதே செங்கல் சூளையில் சீவலப்பேரி வடக்கு தெருவை சேர்ந்த மாடசாமி (23) என்பவரும் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாடசாமி, கல்யாணியிடம் பணம் கேட்டார். ஆனால் கல்யாணி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மாடசாமி, கல்யாணியின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தார்.




Next Story