2,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு வாலிபர் கைது
சின்னசேலம் அருகே 2,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு வாலிபர் கைது
சின்னசேலம்
சின்னசேலம் அருகே தகரை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையில் போலீசார் தகரை கள்ளக்குன்னு ஓடை பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக நின்று கொண்டிருந்த 4 பேர் தப்பி ஓடினர். உடனே போலீசார் பின்னால் துரத்தி சென்று 2 லாரி டியூப்களில் 120 லிட்டர் சாராயத்துடன் தப்பி ஓடிய வாலிபரை மட்டும் பிடித்தனர். விசாரணையில் அவர் நாககுப்பம் கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி மகன் கருப்பன்(வயது 34) என்பதும் தப்பி ஓடியவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த முருகேசன், சம்பத், முருகன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கருப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 120 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் வைத்திருந்த 2,200 லிட்டர் சாராய ஊறலை தரையில் கொட்டி அழித்த போலீசார் தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.