பாட்டிலை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது


பாட்டிலை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
x

பாட்டிலை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் உசேன் உதுமான் (வயது 34). இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி ரோட்டில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சிவந்திப்பட்டியை சேர்ந்த செய்யது அலி என்ற மாயாண்டி (19) என்பவர் உசேன் உதுமானை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டினார். மேலும் உடைந்த பாட்டிலை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.2,500 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டார்.

இதுகுறித்து மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து செய்யது அலி என்ற மாயாண்டியை கைது செய்தார்.


Next Story