வனவிலங்குகளை வேட்டையாட சென்ற வாலிபர் கைது
வனவிலங்குகளை வேட்டையாட சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
எலவனாசூர்கோட்டை,
எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீரமங்கலம் அருகே ஆசனூர்-திருக்கோவிலூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் வழிமறித்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும், அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனால் அவர்களில் ஒருவரை மட்டும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் எறையூர் கிராமத்தை சேர்ந்த ஜான் மில்கியூர் (வயது 29) என்பது தெரியவந்தது. மேலும் அவர் அப்பகுதியில் உள்ள காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இது தவிர தப்பிச்சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த குமார் (30), குமார் என்கிற மெக்கானிக் குமார் (29) மற்றும் ஜான்சன் (30) ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.