வீட்டின் மீது பட்டாசு வீசியதை தட்டி கேட்டவரை தாக்கிய வாலிபர் கைது


வீட்டின் மீது பட்டாசு வீசியதை தட்டி கேட்டவரை தாக்கிய வாலிபர் கைது
x

வீட்டின் மீது பட்டாசு வீசியதை தட்டி கேட்டவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

மதுரை


மதுரை அனுப்பானடி காமராஜர் புது தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 57). அதே பகுதியை சேர்ந்தவர் காமேஸ்வரன் (23). இவர் நண்பர்களுடன் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடித்துள்ளார். அந்த வெடி முத்துக்கிருஷ்ணன் வீட்டில் விழுந்துள்ளது. இது குறித்து அவர் தட்டி கேட்ட போது காமேஸ்வரன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காமேஸ்வரனை கைது செய்தனர்.


Next Story