சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
x
கடலூர்

சேத்தியாத்தோப்பு

மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு 17 வயது சிறுமியை பிரசவத்துக்காக அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஒரத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சேத்தியாத்தோப்பு அடுத்த சி.சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த சங்கு ராஜா மகன் விஜயராஜ்(வயது 34) என்பவர் சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


Next Story