சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
x

பணகுடி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

பணகுடி அருகே உள்ள காவல்கிணறு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் மகன் அபிஷேக் (வயது 20). இவர் 13 வயது சிறுமியை திருமணம் செய்து உள்ளார். இதற்கு சிறுமியின் தாய் கலைச்செல்வி உடந்தையாக இருந்துள்ளார்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அபிஷேக், கலைச்செல்வி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story