இளம்பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது


இளம்பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது
x

இளம்பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் அருகே காரணை கிராமத்தை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 30). சம்பவத்தன்று இவர் 20 வயதுடைய இளம்பெண்ணை கிண்டல் செய்ததோடு, கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட அந்த பெண்ணின் தந்தையை அவர் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் வழக்குப்பதிவு செய்து இருதயராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story