போக்குவரத்திற்கு இடையூறு செய்த வாலிபர் கைது
கீழ்பென்னாத்தூர் பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்திற்கு இடையூறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் வடஅரசம்பட்டு பகுதியை சேர்ந்த எழில்ராஜன் என்பவரின் மகன் அருணாச்சலம் என்ற அருண் (வயது 23) என்பவர் ஆபாசமாக கத்திக்கொண்டு, போக்குவரத்திற்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை கீழ்பென்னாத்தூர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் வழக்குபதிவு செய்து, திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story