கர்நாடக மாநில பாக்கெட் மது விற்ற வாலிபர் கைது


கர்நாடக மாநில பாக்கெட் மது விற்ற வாலிபர் கைது
x

ஆம்பூரில் கர்நாடக மாநில பாக்கெட் மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம் இரவு பைபாஸ் சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு தியேட்டரின் பின்புறம் வாலிபர் ஒருவர் கர்நாடக மாநில மது பாக்கெட்களை விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து உடனடியாக அங்கு சென்ற போலீசார் அவரை மாடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 28) என்பதும், கர்நாடகாவில் இருந்து மது பாக்கெட்களை வாங்கி வந்து விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 15 மது பாக்கெட்டுகள், 10 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story