16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை செரிவாசல் ரோடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் முனியாண்டி என்கிற பாதம் பிரியன் (வயது 19). இவர் திருச்சியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். பின்னர் அந்த சிறுமியை 3-ந்தேதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கோவையில் தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை நேற்று அவரது வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
இதைதொடர்ந்து அந்த சிறுமியின் பெற்றோர் திருச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டி என்கிற பாதம் பிரியனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.