பெண்ணிடம் ஆபாச சைகை காண்பித்ததாக வாலிபர் கைது


தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் ஆபாச சைகை காண்பித்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மேலகூட்டுடன்காட்டை சேர்ந்தவர் முத்துகணேஷ் (வயது 26). இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் பாரத் பெட்ரோலியம் கியாஸ் கம்பெனி அருகே நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 40 வயது பெண்ணிடம், அவர் ஆபாசமாக சைகை காண்பித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹென்சன் பவுல்ராஜ் வழக்குப்பதிவு செய்து முத்துகணேசை கைது செய்தார்.


Next Story