மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது
குடவாசல் அருகே மதுபாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குடவாசல்:
குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் குடவாசல் பகுதிகளில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அந்த நபர் போலீசாரை பார்த்ததும், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளார். உடனே போலீசார் விரட்டி சென்று பிடித்து சோதனை செய்தனர். இதில் 40 வெளிமாநில மதுபாட்டில்கள் இருந்தது. பின்னர் பிடிப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர், நீடாமங்கலம் அருகே உள்ள திருவரங்கநல்லூர் மோகன் மகன் தீனா (வயது28) என்பதும், மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தில சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனாவை கைதுசெய்தனர். மேலும் அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.