ரெயிலில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது
ரெயிலில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை
ரெயிலில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், உஷாராணி மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சென்னை ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூரு செல்லும் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது 50 கிலோ எடையுள்ள 4 மூட்டைகளில் 200 கிலோ ரேஷன் அரிசியை பெங்களூருக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரேஷன் அரிசி கடத்திய வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் விஜய்யை திருப்பத்தூர் உணவு பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வு பிரிவு போலிசாரிடம் ஒப்படைத்தனர்.