குலசேகரம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் வாலிபர் கைது


குலசேகரம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் வாலிபர் கைது
x

குலசேகரம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் அருகே செருப்பாலூர் மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் மரிய செல்வி (வயது 64). இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது வீட்டு முற்றத்தை காலையில் பெருக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் 2½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். இதுதொடர்பாக குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது கேரள மாநிலம் பாறசாலை, கருமனூர் பகுதியை சேர்ந்த மது என்பவரது மகன் மணீஷ் (20) என்பது தெரிய வந்தது.

அவர் குறித்து விசாரித்த போலீசார் மணீஷின் செல்போன் எண்ணை கண்டு பிடித்தனர். செல்போன் டவரை வைத்து மணீஷ் இருக்கும் இடத்தை கண்காணித்தனர். அப்போது மணீஷ் குலசேகரத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மணிசை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து சென்று சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர் மீது நித்திரவிளை போலீஸ் நிலைய பகுதியில் தங்கச் சங்கிலி பறித்த வழக்கு இருப்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மணீஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story