அலுவலக ஊழியரை கத்தியால் குத்திய வாலிபர் கைது


அலுவலக ஊழியரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
x

அலுவலக ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் அலெக்ஸ் பாண்டியன்(வயது 37). இவர் அரியலூர் தாலுகா அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். அதே தெருவை சேர்ந்தவர் ரவி மகன் மணிகண்டன்(22). இவர்கள் இருவருக்கும், இடப்பிரச்சினை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அலெக்ஸ்பாண்டியன் தந்தை கோவிந்தனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் அலெக்ஸ் பாண்டியன் வெளியே சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மணிகண்டன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அலெக்ஸ்பாண்டியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.


Next Story