சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்ற வாலிபர் கைது
ரெட்டிச்சாவடி அருகே சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்
ரெட்டிச்சாவடி,
ரெட்டிச்சாவடி அடுத்த கீழ்குமாரமங்கலம் பகுதியில் வாலிபர் ஒருவர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களை மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்த தகவலின் பேரில் ரெட்டிச்சாவடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த வாலிபரை பிடித்து விசாரிக்க முயன்றார். அப்போது அந்த வாலிபர் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தை கத்தியால் குத்த முயன்றார். மேலும் அவரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டலும் விடுத்தார்.இருப்பினும் சாதுர்யமாக செயல்பட்டு அந்த வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார். இதில் அவர் புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த சக்தி (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story