தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது


தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது
x

ராணிப்பேட்டையில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை புதிய ரொட்டிகார தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 30). தனியார் நிறுவன தொழிலாளி. இவரை அதே பகுதியை சேர்ந்த வினோத் (32) என்பவர் முன்விரோதம் காரணமாக, அசிங்கமாக திட்டி, தான் வைத்திருந்த கத்தியால் பிரபுவின் உடலில் பல இடங்களில் கிழித்து ரத்த காயம் ஏற்படுத்துள்ளார்.

இதை தடுக்க வந்த சிவகாமி என்பவரை அசிங்கமாக பேசி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story