மாடு திருடிய வாலிபர் கைது


மாடு திருடிய வாலிபர் கைது
x

மாடு திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 36). விவசாய கூலி தொழிலாளி. இவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மாடுகளை மேய்த்துவிட்டு வீட்டின் முன்புறமுள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். விடியற்காலை மாடு கத்தும் சத்தம் கேட்டு, தூங்கிக் கொண்டிருந்த பாலு வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது, ஒரு பசுமாட்டை மர்மநபர் ஒருவர் ஓட்டி செல்வதை பார்த்து பாலு சத்தம் போடவே சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ள உறவினரான ஜெகஜீவராம் ஓடி வந்துள்ளார். இருவரையும் பார்த்த மர்மநபர் மாட்டை விட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளார். இதையடுத்து பாலு, ஜெகஜீவராம் இருவரும் சத்தம் போட்டுக் கொண்டே மர்ம நபரை துரத்தியுள்ளனர். சத்தம் கேட்டு கிராம பொதுமக்களும் துரத்தி சென்று மர்ம நபரை பிடித்து விசாரித்ததில், விளந்தை கிராமம் தில்லை நகரை சேர்ந்த செந்தில்குமார் மகன் பாரத் (20) என்பதும் மாட்டை திருட வந்ததை ஒப்புக்கொண்டதையடுத்து பாலு மீன்சுருட்டி போலீசில் பாரத்தை ஒப்படைத்து, புகார் அளித்ததின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து பாரத்தை கைது செய்து வேறு எங்கேயும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story