வாகனங்களில் டீசல் திருடிய வாலிபர் கைது


வாகனங்களில் டீசல் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவேங்கடம் பகுதியில் வாகனங்களில் டீசல் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

திருவேங்கடம்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அடுத்துள்ள மகாத்மா காந்தி நகரில் சங்கரன்கோவில் செல்லும் சாலையின் ஓரத்தில் பல்வேறு வாகனங்களை இரவு நேரங்களில் நிறுத்தி விட்டு செல்வார்கள். மறுநாள் டிரைவர்கள் வாகனங்கள் எடுக்கும்போது அதில் டீசல் அளவு குறைந்திருக்கும். இதுகுறித்து டிரைவர்கள் திருவேங்கடம் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா புதிதாக பொருத்தப்பட்டது.

இந்தநிலையில் நேற்றும் திருவேங்கடம் அடுத்துள்ள குறிஞ்சாக்குளம் ஜோதிடர் தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ராஜேஷ் கண்ணன் என்பவர் நிறுத்திவிட்டு சென்ற பொக்லைன் எந்திரத்தில் டீசல் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருவேங்கடம் போலீசாருக்கு தகவல் அளித்தவுடன் போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்பொழுது ஒரு மர்ம நபர் வாகனங்களில் டீசல் திருடுவது தெரிந்தது.

இதுபற்றி திருவேங்கடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூசை பாண்டியன் விசாரணை நடத்தினார். அப்போது டீசல் திருட்டில் ஈடுபட்டது குருவிகுளம் கோபாலகிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் வைரவசாமி (வயது 40) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, 40 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர். போலீசார் வைரவசாமியிடம் நடத்திய விசாரணையில், வாகனங்களில் தொடர்ந்து பல நாட்களாக டீசல் திருடியதாக ஒப்புக்கொண்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.



Next Story