விபத்தில் சிக்கியவரிடம் நகை திருடிய வாலிபர் கைது


விபத்தில் சிக்கியவரிடம் நகை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் விபத்தில் சிக்கியவரிடம் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

கடலூர்:

நெய்வேலி 3-வது வட்டம் சுவாமிவிவேகானந்தர் சாலையை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 52). இவர் சம்பவத்தன்று சேப்ளாநத்தத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டு 21-வது வட்டம் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சித்திரை வீதியை சேர்ந்த பாண்டியன் மகன் கிருபாபரன் (23) என்பவர் பார்த்து, அவரை காப்பாற்றுவது போல், ஓரமாக தூக்கி சென்று அமர வைத்து விட்டு சென்று விட்டார்.

பின்னர் தாமரைச்செல்வன் தனது வீட்டுக்கு சென்று பார்த்த போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை காணவில்லை. அதை கிருபாகரன் திருடிச்சென்று விட்டதாக நெய்வேலி தெர்மல் போலீசில் தாமரைச்செல்வன் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபாகரனை பிடித்து விசாரித்த போது, அவர் உண்மையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story