வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது


வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது
x

வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள தாழையூத்து பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் அழகு கிருஷ்ணகுமாரி (வயது 54). கடந்த 5-ந் தேதி இவரது கணவர் வேலைக்கு சென்றுவிட்டார். 2 மகள்களும் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சென்றுவிட்டனர். இதனால் அழகுகிருஷ்ணகுமாரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் கோவிலுக்கு சென்ற மகள்கள் வீட்டிற்கு வந்தனர். 7-ந் தேதி வெளியில் செல்வதற்காக பீரோவில் இருந்த நகைகளை 2 மகள்கள் தேடினார்கள். ஆனால் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அழகு கிருஷ்ணகுமாரி வீட்டில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தார். அப்போது, வடக்கு தாைழயூத்து பகுதியைச் சேர்ந்த தங்கதுரை (28) என்பவர் கடந்த 5-ந் தேதி அழகு கிருஷ்ணகுமாரி வீட்டில் புகுந்து 10 பவுன் தங்க நகையை திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து தாழையூத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லதங்கம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தங்கத்துரையை நேற்று கைது செய்தனர்.


Next Story